மகாராஷ்டிரர்களை பற்றியது. இதயசந்திரன் தஞ்சையிலிருந்து ஒருவனைத் தேடி மகாராஷ்டிரம் செல்லும் வழியில் பிரும்மேந்திர சுவாமியை சந்திக்கிறான். அந்த சுவாமியினால், கனோஜி ஆங்கரே இதயசந்திரனை தன்னுடன் அழைத்து செல்கிறான். கனோஜி ஆங்கரே தன் மாலுமி காஸ்ட்ரோவிடம் இதயசந்திரனையும் மாலுமியாக்க சொல்ல, இருவரும் ஜல தீபம் என்னும் கப்பலில் பயணிக்கிறார்கள்.
இரண்டரை ஆண்டுகளில், சிறந்த கடற்படை மாலுமியான இதயசந்திரனை கனோஜி ஆங்கரே தன் தரைப்படைக்கு உபதளபதியாக நியமிக்கிறார்.
இதயசந்திரனால் தேடபட்டவன் என்னானான்? மஞ்சுவின் பிறப்பின் ரகசியம், கனோஜி ஆங்கரேவுக்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையேயான போர், கனோஜி ஆங்கரேவுக்கும் மகாராஷ்டிர அரசுக்குமான உடன்படிக்கை யாரால் எப்படி ஏற்படுகிறது? என்பதையெல்லாம் எதிர்பார்க்க முடியாத திருப்பங்களோடு இக்கதையை முடிக்கிறார்.
No comments:
Post a Comment