Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday, 3 February 2014

யுத்த காண்டம் - 1

இராமர் அனுமார் கூறியதை எல்லாம் கேட்டு ஆனந்தம் அடைந்தார். அவரும் “ஆகா! இப்படிப்பட்ட வேலையை வேறு யாரால் செய்ய முடியும்? கடலைக் கடப்பது என்பது சாமானியமானதா? அப்படிக் கடந்து இலங்கைக்குள் நுழைந்து சீதையைப் பார்த்து விட்டுத் திரும்பி வந்திருக்கிறார். இலங்கையை நாசப்படுத்தி இராவணனது கட்டு திட்டங்களை எல்லாம் தவிடு பொடியாகச் செய்து விட்டார் அல்லவா! இவர் எனக்கும் சீதைக்கும் மறுவாழ்வு அளித்தவராவார்” எனக்கூறி அனுமாரை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டார். 
சற்று நேரத்திற்குப் பின்னர் அவர் சுக்ரீவனைப் பார்த்து, “சீதை இருக்கும் இடத்தை கண்டு பிடித்தாகிவிட்டது. இனி நாம் அங்கே எப்படிப் போவது என்பது ஒரு பெருத்த பிரச்சினையாகி விட்டதே!” எனக் கவலலையோடு கூறலானார்.
அப்போது சுக்ரீவன் “நீங்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம். இலங்கைக்குப் போக சமுத்திரத்தில் பெரிய பாலம் கட்டுவோம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் போயிற்று. அதை மட்டும் செய்து முடித்து விட்டால் இராவணனின் வாழ் நாள்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனவே அதற்கான செயலில் ஈடுபடலாம்” என உற்சாக மொழிகளைக் கூறினான். இராமரும் “ஆமாம், இலங்கையை நாம் எப்படியும் அடைந்தே தீரவேண்டும்.


இராமரும்  ஆமாம் இலங்கையை நாம் எப்படியும் அடைந்தே தீரவேண்டும். அது பாலம் கட்டிப் போனாலும் சரி அல்லது தவம் செய்து போனாலும் சரி. எப்படியும் எடுத்த வேலையை மனம் தளராமல் செய்ய வேண்டும் ” எனக் கூறினார்.

பின்னர் அனுமாரிடம்  இலங்கைக் கோட்டையின் அமைப்பு எப்படி இராவணனின் படை பலம் எவ்வளவு பாதுகாப்பு அமைப்பு எவ்விதம் உள்ளது ?” என்று பல கேள்விகளையும் அவர் கேட்டார். அனுமாரும் இலங்கைவாசிகளைப் பார்த்தால் அவர்கள் எவ்வித குறையும் இன்றி வாழ்வதாகவே தெரிகிறது. இலங்கை மிகப் பெரிய பட்டணம். அதில் நால்வகைப் படைகள் தக்க முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன. அதற்குள் போக நான்கு கோட்டை வாசல்கள் உண்டு. அங்கு எதிரிகளை அழிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோட்டையைச் சுற்றிலும் ஆழமான அகழி உள்ளது. அதனைத் தாண்டிச் செல்வது சுலபமல்ல. எதிரிகள் தம் படைகளோடு திடுதிப்பென அதற்குள் சென்று விடமுடியாது.

 அகழிகளைக் கடக்க மரப்பாலங்களை அவ்வப்போது உயர்த்தி தாழ்த்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே இலங்கை நன்கு பாதுகாப்புடன் உள்ளது என்பதை அறியலாம். அது மட்டுமல்ல இராவணனிடம் எப்போதும் போர் புரிய படைகள் தயாராகவே உள்ளன.

போருக்கென படை தயாரிக்க வேண்டியது இல்லை. இதெல்லாம் போக இலங்கையைப் பாதுகாக்க சுற்றிலும் சமுத்திரமும் ஒருபுறம் திரிகூட மலையும் உள்ளதால் அதனை அடைவது சிரமமே. இவ்வளவும் கடந்தால் அடர்ந்த காடுகள். இவற்றைத் தாண்டினால் கோட்டையைச் சுற்றிலும் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள். பயங்கரமான அரக்கர்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். நான் பல அரக்கர்களைக் கொன்று வந்திருக்கிறேன். பல இடங்களை நாசம் செய்து விட்டேன்.

ஆதலால் இப்போது இலங்கைக்குள் நுழைவது சற்று சுலபமாக இருக்கலாம். நம்மிடம் பல இணையற்ற வீரர்கள் இருக்கிறார்களே!  அங்கதன் துவிவீதன் மைந்தன் ஜாம்பவந்தன் பனகன் நளன் நீலன் முதலிய சேனைத் தலைவர்கள் உள்ளனர். இவர்களால் இலங்கையில் உள்ள அரக்கர்களோடு போரிடமுடியும். எனவே ஒரு நல்ல வேளை பார்த்து இலங்கை மீது படை எடுத்துக் செல்ல நீங்கள் முடிவு செய்துவிடுங்கள் ” என்றார்.


அதையெல்லாம் இராமர் நன்கு கேட்டு விட்டு சுக்ரீவனிடம்  அனுமார் கூறியபடி இலங்கை மீது படை எடுத்துச் செல்வோம். இன்றே இப்போதே கிளம்பலாம். இப்போது உச்சிவேளை இதை அபிஜித்து என்ற நல்ல முகூர்த்த காலம் எனக்கூறுவர். இந்த வேளையில் ஆரம்பிக்கும் வேலை வெற்றிகரமாக முடியும். மேலும் இன்று பங்குனி உத்திரம். என் பிறப்பு நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு அனுகூலமானது. மேலும் பல நல்ல அறிகுறிகள் சேர்ந்து இருப்பதால் இந்த முகூர்த்த வேளையிலேயே நாம் கிளம்பலாம் ” என்றார்.

உடனே படைத்தலைவனான நீலன் இராமரின் ஆலோசனைப் படி படையை அமைக்கலானான். படைமுன் செல்லும் வானர வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். படையின் இருபுறமும் செல்லும் வானர வீரர்களையும் குறிப்பிட்டான். பின்புறமாகச் செல்லும் படை வீரர்களையும் நியமித்தான். உணவுப் பொருள்களைச் சேகரிக்க வானரங்களையும் செல்லும் வழியைக் காட்ட பல வானரங்களையும் நியமித்தான். இப்படியாக அவன் தக்க முன்னேற்பாடுகளை எல்லாம் செய்து விட்டான்.

எல்லாம் செய்து முடித்தபிறகு சுக்ரீவன் இனி யாவரும் கிளம்புங்கள் எனக்கட்டளை இடவே வானரங்கள் உற்சாகத்தோடு கோஷங்கள் போட்டவாறே பல இடங்களில் இருந்தும் கிளம்பி வந்தன. ஒரு பெருத்த கடலே தென் திசையை நோக்கிச் செல்வதுபோல இருந்தது. அனுமார் இராமரைத் தன் தோளில் ஏற்றிக் கொண்டார். இலட்சுமணனை அங்கதன் தூக்கிக் கொண்டான்.

வானரங்கள் சிரித்துக் கொண்டும் குதித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் உற்சாகம் கரை புரண்டு ஓடிச் செல்லலாயினர். ரிஷபன் நீலன் குமுதன் ஆகியோர் முன் நின்று வழி காட்ட அந்தப் பெரிய வானரசேனை இலங்கையை நோக்கி செல்லலாயிற்று. வெகு சீக்கிரத்திலேயே யாவரும் சமுத்திரக் கரையைச் சென்று அடைந்தனர்.

இராமரும் இலட்சமணனும் சுக்ரீவனுமாக மகேந்திர மலையின் மீது ஏறிச் சுற்றிலும் பார்த்தனர். அங்கிருந்து கடலைப் பார்த்துவிட்டு அவர்கள் கீழே இறங்கி வந்தனர். கடற்கரை அருகே போய் கடலையும் நன்கு கவனித்தனர்.

அதன் பிறகு இராமர் சுக்ரீவனிடம்  இனி நாம் கடலைக் கடக்க வேண்டியதுதான். வேறு நிலப்பரப்பு ஒன்றும் இல்லை. நாம் யாவரும் இங்கேயே தங்கி அதற்கான வேலையைச் செய்வோம். யாரும் இங்கு இருந்து வெகு தூரம் போகவேண்டாம். ஒரு வேளை எதிரிகளுக்கு நம் நடமாட்டம் தெரிந்து நம்மைத் தாக்க வந்தால் அவர்களை எதிர்க்க எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும் ” என்றார்.

சுக்ரீவன் அந்த வானர சேனையை மூன்று பகுதிகளாகப் பிரித்தான். யாவரும் கோசமிட்டுக்கொண்டு நின்றனர். கடலின் கொந்தளிப்பால் ஏற்பட்ட சத்தம் கூட வானரங்கள் போட்ட கூச்சலில் யாருக்கும் கேட்காமல் போயிற்று. யாவரும் அந்த மாபெரும் கடலைப் பார்த்து நின்றனர். அதனை எப்படிக் கடப்பது என்ற மலைப்பு தோன்றியது.
நீலன் முறைப்படி சேனைத் தலைவன் ஆனான். சேனையின் பக்க பலத் தலைவர்களாக மைந்தனும் துவிவீதனும் பொறுப்பேற்றனர்.


இவ்வாறு பல விதமான சேனையின் அமைப்பை ஏற்படுத்தியாகி விட்டன.
இராமர் ஓரிடத்தில் அமர்ந்து சீதையைப் பற்றிய நினைத்துக் கொண்டு இருந்தார். இலட்சுமணனும் அவரருகே இருந்து அவர் துயரப் பட்டுக் கூறும் வேதனை நிறைந்த மொழிகளை கேட்டுக் கொண்டிருந்தார். மெது மெதுவாக பொழுதும் போய் மாலையாகி விட்டது.

இலட்சுமணன் இராமருக்கு ஆறுதல் மொழிகளைக் கூறித் தேற்றினார். அதன் பின்னர் இராமரும் மாலையில் செய்யும் சந்தியாவந்தனத்தைச் செய்தார். அதன் பிறகு யாவரும் தத்தம் வேலைகளில்   மூழ்கினர்.

இதே சமயம் இலங்கையில் இராவணன் மிகவும் கோபம் கொண்டு அரக்கர்களிடம் வார்த்தைகளை நெருப்புப் பொறி தெறிப்பதுபோல அள்ளி விட்டுக் கொண்டு இருந்தான்.  இலங்கைக் கோட்டைக்குள் இதுநாள் வரை யாருமே நுழைய முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு குரங்கு உள்ளே புகுந்து வந்து பெரிய பெரிய அரக்கர்களை அழித்ததோடு அல்லாமல் நகருக்கே தீ மூட்டி நாசப்படுத்தி விட்டது. இது எவ்வளவு பெரிய அவமானம். அது மட்டுமா கட்டுகாவலோடு சிறைப்படுத்தப்பட்ட சீதையைக் கண்டு அது அவளோடு பேசிவிட்டுப் போய் இருக்கிறது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு நாம் பேசாமல் இருந்து இருக்கிறோம். இப்போதோ அந்த இராமர் பல்லாயிரம் வானரங்களோடு இலங்கை மீது படை எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறானாம். சுக்ரீவனின் துணையோடும் இலட்சுமணனின் துணையோடும் உள்ள அவன் எப்படியும் கடலைக் கடந்தே விடுவான். இதில் சந்தேகமே இல்லை. கடலை வற்றச் செய்தோ அல்லது வேறு எந்த உபாயத்தாலோ கடலைக் கடந்து இலங்கை மீது படை எடுத்து வந்தால் அந்தப் படை எடுப்பை நாம் எப்படி எதிர்ப்பது என்ன செய்வது என்று நீங்கள் கூறுங்கள் ” என்றான்.

அதுகேட்டு மற்ற அரக்கர்கள்  அரக்கர்களின் மாபெரும் மன்னரே! உங்களுக்கு திடீரென ஏன் சந்தேகம் வந்து விட்டது நமக்கு பலமில்லையா தைரியம் இல்லையா ஆட்கள் இல்லையா நம் சக்திதான் எவ்வளவு பலவிதமான ஆயுதங்கள் மந்திர தந்திரங்கள் தெரிந்துள்ள அரக்கர்கள் இருக்க நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ?உங்களது சக்திதான் மூவுலகிற்கும் தெரிந்ததாயிற்றே. உங்களை யாரால் என்ன செய்ய முடியும் குபேரனையே வென்று அவனது புஷ்பக விமானத்தை நீங்கள் கொண்டு வரவில்லையா மயனே உங்களுக்குத் தன் மகளான மண்டோதரியை விவாகம் செய்து கொடுத்து அடங்கிவிடவில்லையா ?
 வாசுகி தட்சகன் போன்ற சர்ப்ப மன்னர்கள் உங்களுக்கு அடங்கிக் கிடக்கிறார்களே. மாயா சக்தியில் கை தேர்ந்தவர்களான காலகேயர்கள் உங்களோடு போரிட்டு முடிவில் தோற்றுப் போகவில்லையா வருணன் ,எமன் போன்ற தேவர்கள் உங்களுக்கு அடங்கிவிடவில்லையா ?இவர்களை எல்லாம்விட அந்த இராமன் சக்தி வாய்ந்தவனா பெரிய பெரிய வீரர்களை அடக்கிய உங்களுக்கு இந்த இராமன் கொசுவுக்குச் சமமானவன். மேலும் உங்கள் மகன் இந்திரஜித்து இருக்கிறானே. பல வரங்களைப் பெற்ற அவன் இந்திரனையே வென்றவன். இப்படிப்பட்டவனால் இராமரையே ஒரு கட்டுக்கட்டி நிமிடத்தில் சிறைப்பிடித்து விட முடியும். எனவே நீங்கள் சற்றும் கவலைப்படாதீர்கள். அந்த வானரமான அனுமான் செய்த சேஷ்டைகளைப் பற்றி நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள் ” எனக் கூறினார்கள்.

இது போலவே பிரகஸ்தனும் துன்முகனும் வச்சிரதம்ஷ்ட்ரனும் கும்பகர்ணனின் மகன் நிகும்பனும் வீராவேச   மொழிகளைக் கூறினர். வச்சிரகன் என்பவனோ எல்லா வானரங்களையும் விழுங்கி விட்டு வரமுடியுமெனக் கூறினான். இப்படி எல்லாம் ஒவ்வொருவரும் தம் வீரப்பிரதாபங்களை எல்லாம்
எடுத்துக் கூறி வானரப்படைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறலாயினர். இராவணனும் அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தான்.                             

(தொடரும்)

சுந்தரகாண்டம் 7


இலங்கையை இராவணன் இட்ட தீயாலேயே எத்து அழித்த அனுமார் மீண்டும் அசோக வனத்திற்குச் சென்றார். அங்கு சீதாபிராட்டியைக் கண்டு வணங்கி "இனி நான் விரைந்து சென்று இராமடம் தகவல் சொல்கிறேன். அவரும் இங்கு படையோடு வந்து உங்களை மீட்டுச் செல்வார்" எனக் கூறினான்.


பின்னர் அவர் சீதையை வணங்கி விடைப்பெற்றுக் கொண்டு அஷ்டம் என்னும் மலைமீது ஏறினார். தன் உடலைப் பெதாக்கிக் கொண்டு உயரக் கிளம்பினார். மேகங்கள் இடையே புகுந்து மறைந்து காற்றிலே சஞ்சத்துக் கொண்டே மகேந்திரபர்வதம் இருக்கும் இடத்தை அவர் விரைவிலேயே வந்தடைந்தார்.
அம்மலையைக் கண்டதும் அவர் சந்தோஷத்தால் ஆர்ப்பக்க அங்கு அனுமான் வரவை எதிர் பார்த்து இருந்த வானரர்கள் மிகவும் மகிழ்ந்தனர். ஜாம்பவானே "அனுமார் எந்த வேலையையும் திறன்பட செய்து டித்து விட்டே வருவார் என்று எனக்கு அசைக்க டியாத நிம்பிக்கை உண்டு" என்றார்.
வானரர்கள் அருகே இருந்த மரங்களின் மீதேறி சந்தோஷத்தால் கூச்சலிட்டு அனுமாரை வரவேற்கலாயினர். அனுமாரும் மகேந்திர பர்வதத்தை நோக்கி இறங்கி வந்தார். அவரை எல்லா  வானரர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

அனுமார் அங்குள்ள தியோர்களையெல்லாம் வணங்கியவாறே "கண்டேன் சீதையை" என இரத்தினச் சுருக்கமாகக் கூறி அவர்களது ஆவலைத் தணித்தார்.


அதைக் கேட்டு யாவரும் ஆனந்தக் கூத்தாடினர். இதற்கு இடையில் ஜாம்பவான் "அனுமாரே, நீங்கள் சீதையை எங்கே கண்டீர்கள்? தேவியார் எப்படி இருக்கிறார்? அவரோடு நீங்கள் என்ன பேசினீர்கள்? இராவணன் அவரைத் துன்புறுத்தவில்லையே? உங்கள் பிரயாணம் சுகமாக டிந்ததா? உங்களுக்கும் அரக்கர்களால் எவ்விதத் தொந்தரவும் ஏற்படவில்லையே" எனப் பலவிதமான கேள்விகளைக் ஒரே ச்சில் கேட்டார்.


இதற்குள் அங்கதன் எல்லாரையும் அமைதியாக உட்கார வைத்து எல்லாவற்றையும் விவவரமாகக் கூறும்படி அனமாடம் வேண்டிக் கொண்டான். அனுமாரும் தன் அனுபவத்தைக் கூறலானர்.
"நான் கிளம்பிச் சென்றதை நீங்கள் கண்டீர்களல்லவா? சிறிது தூரம் போனதும் கடலின் நிடுவிலே தங்கச் சிகரம் கொண்டுள்ள மலை ஒன்றைக் கண்டேன். அதன் பெயர் மைனாகம். அதனை ஒரு காலத்தில் என் தந்தையான வாயுதேவர் இந்திரனிடமிருந்து காப்பாற்றினாராம். அதனோடு பேசி அங்கு சற்று இளைப்பாறிவிட்டுக் கிளம்பினேன். பின்னர் ஒரு பெய கடல்ஜந்துவின் வாயில் புகுந்து வெளி வந்து அதனை வென்றேன். சர்ப்பங்களுக்கு எல்லாம் அந்த கடல் ஜந்து தாயாகும். 


"அதன் பிறகு இலங்கையை அடைந்தேன். இருட்டும் வேளை, அங்க காவல் புந்த இலங்கிணியை நான் வென்று சீதா தேவியை இலங்காபு ழுவதும் தேடிப்பார்த்தேன். டிவில் அசோக வனத்தில் கண்டேன். சீதை மகாபதிவிரதை. இராவணனால் சீதாதேவியை அணுகக்கூட டியவில்லை. இராமரைக் கண்டாலே சீதா தேவியின் மனம் ஆறுதல் பெறும். அவரையே பிராட்டியார் அல்லும் பகலுமாக எண்ணி எண்ணி ஏங்குகிறார். 


"என்னை இரவணன் பிடித்து வாலில் தீயிட்டான். அந்த நெருப்பைக் கொண்டே நான் இலங்கையைக் கொளுத்தி விட்டேன். நாம் எல்லாருமாகச் சேர்ந்து இராவணனை றியடித்துவிட டியும். இப்போதே போய் இரவணனைக் கொன்று சீதையை இராமடம் ஒப்படைத்துவிடக் கூட டியும்" என்று அனுமார் தான் சென்று வந்ததை விவரமாகக் கூறினார்.


 இவ்வாறு அனுமார் கூறியதைக் கேட்டு அங்கதன் "சீதா தேவியைக் கண்டோம் என்று கூறுவதை விட இராமடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதே மேல். மேலும் அனுமார் பல அரக்கர்களை அழித்து விட்டார்.  எனவே இராவணனை இப்போதே வெல்வது நிமக்கு மிகச் சுலபமே" என்றான்.

அதுகேட்டு ஜாம்பவான் "இளவரசே, இது நில்லதுதான். ஆனால் இது பற்றி இராமன் அபிப்பிராயம் நிமக்குத் தெயாதே. எனவே அவடம் சொல்லி அதன் பிறகு அவர் கூறுவதுபோல நிடப்போம்" என்றார். மற்றவர்களும் அதுதான் சயெனக் கூறினர்.


எல்லா வானரங்களும் உடனே கிஷ்கிந்தையை நோக்கிச் சென்றனர். ஒரே குதூகலம், குதிப்பு, களியாட்டத்தோடு அவர்கள் மதுவனத்தில் நுழைந்தனர். மதுவனத்தில் அதிபன் ததிகன், சுக்கிநூவனின் தாய்மாமன், வானரர்கள் தன் வனத்தையே அழிப்பதைக் கண்டு அவன் அவர்களை எல்லாம் அங்கிருந்து செல்லும்படிக் கூறினான். ஆனால் அந்த வானரங்கள் அவன் பேச்சைச் சிறிது கூட கேட்கவில்லை.

அவர்களது செய்கைக்கு அங்கதன் உற்சாகட்டினான். அனுமாரும் அங்கீகத்தார். அதனால் வானரர்கள் தம் இஷ்டப்பட்டபடி பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். தேனைப் பருகினார்கள். வனத்தின் காவலாளிகளைக் கட்டிப் போட்டார்கள். மரங்கள் செடிகள், எல்லாம் நாசமாகின. இதையெல்லாம் ததிகன் பார்த்த பிறகு தன் ஆட்களைத் திரட்டிக்கொண்டு வந்து கற்களால் வானரங்களைத் தாக்கலானான். ஆனால் அங்கதனோ தேனை நறைய குடித்துவிட்டு மதி இழந்து கிடந்தான். ததிகன் தன் தாத்தா என்பதைக் கூட மறந்து அவனைக் குத்திக் கீழே வீழ்த்தினான். அவன் மயக்கற்று விழுந்து விட்டான்.
சற்று நேரத்திற்குப் பின் அவன் மயக்கம் தெளிந்து எழுந்தான். தன் ஆட்களைப் பார்த்து "இவர்களை இப்படியே விட்டு விடுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.

நான் சுக்கிநூவனிடம் போய் இவர்களது அத்துமீறிய செய்கைகளைக் கூறுகிறேன். அவனே இவர்களை தண்டிக்கட்டும்" எனக்கூறி அங்கிருந்து  சென்றான்.


தன் தாய்மாமனைக் கண்ட சுக்கிநூவன் "ஏது இவ்வளவு அவசர அவசரமாக வருகிறீர்களே. என்ன விசேஷம்?" என்று கேட்டான். அதற்கு ததிகன் "இன்றுவரை என் மதுவனத்தில் யாருமே என் உத்திரவு இல்லாமல் நுழைந்ததில்லை. இப்போது அங்கதன் பல வானரர்களோடு வந்து அதனை நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறான். அவர்களை அங்கிருந்து போகவும் சொன்னேன். ஆனால் ஏனோ என் பேச்சை அவர்கள் கேட்கவில்லை" என்றான்.

அதைக் கேட்ட சுக்கிநூவன் "ஓகோ! தென்திசையை நோக்கிச் சென்ற அனுமான் அங்கதன் தலானோர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்கள் சீதாதேவியைக் கண்டு பிடித்திருக்கவேண்டும். அதனால்தான் இப்படிஎல்லாம் தலைகால் புயாது ஆடுகிறார்கள்" என்றான்.
இதைக் கேட்டு இராமரும் இலட்சுமணரும் ஆனந்தம் அடைந்தனர். சக்கிநூவன் ததிகனிடம் "அவர்கள் செய்தது ரொம்ப சயென்றும் அவர்களது வரவை இராமரும் இலட்சுமணரும் நானும் ஒவ்வொரு வினாடியும் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாகக் கூறுங்கள். அவர்கள் உடனே அங்கிருந்து கிளம்பி விடுவார்கள், உங்கள் வனம் மேலும் நாசமடையாது இருக்கும்" என்று கூறி அனுப்பினான். 


ததிகனும் இராமரையும் இலட்சுமணனையும் வணங்கிவிட்டு சுக்கிநூவனிடம் விடை பெற்றுக் கொண்டு ஆகாய வழியாக மதுவனத்திற்கு விரைவில் போய்ச் சேர்ந்தான். இதற்குள் வானரர்களின் ஆர்ப்பாட்டம் சற்று அடங்கி இருந்தது.
ததிகன் அங்கதனிடம் "நான் சுக்கிநூவனிடம் நீங்கள் எல்லாம் இங்கு வந்திருப்பதைப் பற்றிக் கூறினேன். அவனும் இராமர்,  இலட்சுமணர் இருவரும் உங்களது வருகையை ஒவ்வொரு வினாடியும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உங்களையெல்லாம் உடனே வரச்சொல்லும்படி சுக்கிநூவன் தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறான்" என்றான்.
அப்போது அங்கதன் "ஆமாம் இனி நாம் எங்குமே தங்காமல் நேராக கிஷ்கிந்தைக்குச் செல்வோம். நாம் வருவதுதான் ன்கூட்டியே அவர்களுக்குத் தெந்து விட்டதே" என்றான்.
உடனே எல்லாரும் சற்றும் தாமதிக்காமல் விரைந்து செல்லலாயினர். அங்கதன் தலானோர் ஆகாயத்தில் கிளம்பிச் சென்றனர்.

அவர்கள் அனைவரும் கிஷ்கிந்தைக்குள் நுழைந்து ஆர்ப்பத்தவாறே சென்றனர். இந்த சத்தத்தைக் கேட்ட சுக்கிநூவன் மிகவும் சந்தோஷப்பட்டவனாக "அதோ வந்து விட்டார்கள். அவர்கள் நிற்செய்தியே கொண்டு வருகிறார்கள்" என இராமடம் இலட்சுமணனிடம் கூறினான்.

இதே சமயம் அங்கதனும் அனுமாரும் இராமரும் இலட்சுமணனும் இருக்கும் இடத்தை அடைந்தனர். அப்போது இராமர் அனுமாரையும் அங்கதனையும் பார்த்து "சீதையைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா?" என ஆவல் உடன் அனுமாடம் கேட்டார்.

அப்போது அனுமார் ன் வந்து "கண்டேன் சீதையை" எனக்கூறி சீதை கொடுத்த சூடாமணியை எடுத்து இராமடம் கொடுத்தார். பின்னர் "நீங்கள் இருவரும் சித்திரகூடத்தில் இருந்தபோது ஒரு காகம் செய்த கோரச்செயலையும் என்னிடம் கூறினார்.

இன்னும் ஒரு மாத காலம் இராவணன் சீதைக்கு அவகாசம் கொடுத்திருக்கிறான்" எனக்கூறி தேவியான் நலையை அவர் விவரமாகக் கூறினார். அத்துடன் அவர் நறுத்திக் கொள்ளாமல் இனி அவர் சென்று சீதையை மீட்பதொன்றே வழி என்பதையும் இராமடம் எடுத்துக் கூறினார்.
சூடாமணியைக் கண்டு இராமர் கண்ணீர் வடித்தார். இலட்சுமணனின் துயரத்திற்கும் எல்லையே இல்லை. இராமரோ ‘சூடாமணியோடு பார்த்த சீதையை மீண்டும் காணவே என் மனம் துடிக்கிறது. இன்னும் ஒரு மாதக் காலம் சீதை உயிரோடு இருப்பாளா? அதற்குள் இலங்கைக்குப் போய் விடுவோமா? இனி நான் ஒரு வினாடிகூடத் தாமதிக்க மாட்டேன். அங்கு உள்ள கோர அரக்கிகளின் மத்தியில் அகப்பட்டு சீதை என்ன பாடுபடுகிறாளோ?’ என்று எண்ணி வருத்தப்படலானார்.

அனுமாரும் சீதை சொல்லி அனுப்பியதை எல்லாம் இராமடம் ஒன்று கூடவிடாமல் கூறினார். இராமரும் யாவற்றையும் கவனமாகக் கேட்கலானார். டிவில் அனுமார் "நீங்கள் சென்று இராவணனைக் கொன்று தன்னைச் சிறை மீட்கவேண்டுமென்று சீதாதேவியார் விரும்புகிறார். அதற்காக ஆவனவற்றை எல்லாம் செய்யும்படி என்னையும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார். 

"நானும் தேவியாருக்கு ஆறுதல் மொழிகளைக் கூறிவிட்டு வந்து இருக்கிறேன். என்னைவிடப் பராக்கிரமசாலிகளான பலர் சுக்கிநூவனிடம் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்கூறி அவருக்கு நிம்பிக்கையூட்டி வந்திருக்கிறேன். எனவே நீங்கள் இலங்கைக்கு வந்து இராவணனை அவனது வம்சத்தோடு அழித்து விட்டு தம்மை மீட்டுச் செல்வீர்கள் என சீதாதேவியார் ழு நிம்பிக்கை கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.
இராமரும் அனுமார் கூறியதை எல்லாம் மிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டே வந்தார். இனி சீதையை மீட்க வேண்டியது தானே வேலை.

(சுந்தரகாண்டம் முற்றியது)

சுந்தர காண்டம் - 6



அனுமார் அட்சயகுமாரனைக் கொன்று விட்ட செய்தியறிந்து இராவணன் இடிந்து போனான். இந்திரஜித் அருகிலிருப்பதைக் கண்ட பிறகே ஓரளவு பயம் தெளிந்தது. உடனே அவன் தன் மகனை நோக்கி, "இந்திரஜித்! மூன்று உலகிலும் உனக்கு நிகரான வீரன் யாருமே கிடையாது. எங்கிருந்தோ வந்த ஒரு சாதாரண வானரம் நமது ஐந்து சேனாதிபதிகள், ஜம்புமாலி, இன்னும் பிற ஏராளமான அசுரர்களைக் கொன்றுவிட்டதாக அறிகிறேன். அதனால் அதனுடைய உண்மையான சக்தியை அறிந்து, அதனுடன் சண்டையிட்டுக் கொல்!" என்றான்.

தந்தையின் கட்டளையின்படி, இந்திரஜித் பல ஆயுதங்களுடன் அனுமாரைக் கொல்வதற்காகக் கிளம்பினான். தொலைவிலிருந்தே தன்னுடன் போரிட வரும் இந்திரஜித்தைப் பார்த்துவிட்டு, அனுமார் தன் உடலைப் பெரிதாக்கிக் கொண்டார். பிறகு இருவரும் மோதிக் கொண்டனர். இந்திரஜித் தன்னுடன் பதினோராயிரம் அசுரர்களையும் அழைத்து வந்திருந்தான். அனைவரும் ஏக காலத்தில் அனுமார் மீது அம்புகளை மழையாகப் பொழிந்தனர். ஆனால் அந்த அம்புகள் அனுமாரை ஒன்றுமே செய்யவில்லை. வெகுநேரம் யுத்தம் நடந்தும், அனுமாரை இந்திரஜித்தினால் பிடிக்க முடியவில்லை. அவராலும் இந்திரஜித்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.

தன்னுடைய சாதாரண அம்பு களினால் அனுமாரை ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட இந்திரஜித் கடைசியாக பிரம்மாஸ்திரத்தை அனுமார் மீது பிரயோகித்தான்.


மற்ற அம்புகள் எதுவும் செய்ய முடியாத மாயத்தை பிரம்மாஸ்திரம் செய்து விட்டது. அது அனுமாரின் கை, கால்களை அசைக்க முடியாமல் செய்துவிட்டது.  அப்போது அனுமாருக்கு பிரம்மா தனக்குக் கொடுத்த வரம் நினைவிற்கு வந்தது. எந்த அஸ்திரமும் அனுமாருக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாது. மிகவும் வலிமை வாய்ந்த பிரம்மாஸ்திரம் கூட அவர் கை, கால்களை அசைக்க முடியாமல் செய்ததே தவிர, அவர் உயிரைக் குடிக்கவில்லை. பிரம்மாவின் வரமும், தன் தகப்பனால் வாயுவின் ஆசியும் இருக்கும்வரை தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று அனுமார் தெரிந்து கொண்டார்.

செயலற்றுப் போன அனுமாரைக் கண்டதும், அசுரர்கள் உற்சாகத்துடன், கூச்சலிட்டப்படி, அவருடைய கைகளைக் கயிற்றினால் கட்டினார்கள். அதைப் பார்த்த இந்திரஜித் திடுக்கிட்டான். பிரம்மாஸ்திரம் பிரயோகிக்கப்பட்டவர் மீது கயிறுகள் பட்டால் அஸ்திரத்தின் சக்தி மறைந்துவிடும் என்பது அசுரர்களுக்குத் தெரியவில்லை. அனுமாரைப் போன்ற பலசாலியால் கயிற்றை எளிதாக அறுத்துவிட முடியும். ஆகையால் தன் வீரர்களை இந்திரஜித் கோபத்தில் திட்டினான்.
ஆனால் பிரம்மாஸ்திரம் செலுத்திய பிறகு கயிற்றால் கட்டினால், அஸ்திரத்தின் சக்தி மறைந்து விடும் என்பதை அனுமாரும் உணரவில்லை. உணர்ந்த பிறகும் கூட, அவர் வேறு ஒரு நோக்கத்துடன் தன்னைக் கட்டிய கயிறுகளை அறுக்கவில்லை.

அனுமாரைக் கயிற்றால் கட்டியபிறகு, அவரை மற்ற அசுரர்கள் இராவணின் சபைக்கு அழைத்துச் சென்றனர். "அப்பா! இதோ அந்த வானரம்!" என்றவாறே இந்திரஜித்தும் சபையில் நுழைந்தான்.அனுமாரைக் கண்டதும், சபையிலிருந்த அசுரர்கள், "இந்த வானரம் யார்? இது எங்கிருந்து வந்தது?" என்று வியப்புடன் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். , இராவணனின் கண்கள் அனுமாரைக்கண்டதும் கோபத்தினால் சிவந்தன.


"யார் இந்த வானரம்? எதற்காக இங்கே வந்து இத்தனை அட்டகாசம் செய்தது என்று கேளுங்கள்!" என்று கத்தினான். ஆஜானுபாகுவான, கம்பீரமான தோற்றத்துடன், சிம்மக் குரலில் கர்ஜித்த இராவணனின் தோற்றத்தைக் கண்டு அனுமார் ஒரு கணம் மனத்திற்குள் வியந்தார். இவனைக் கண்டு மூன்று உலகமும் பயந்து நடுங்குவதில் ஆச்சரியம் இல்லை என்ற அவருக்குத் தோன்றியது.

அதற்குள் இராவணனின் கட்டளையின்படி, பிரகஸ்தன் முன்வந்து அனுமாரை நோக்கி, "வானரமே! உன்னை யார் அனுப்பியது? இந்திரனா, விஷ்ணுவா? யார்? யாராயிருந்தாலும் உண்மையைச் சொல்! யார் சார்பாகவும் வராவிட்டால், நீயாக இங்கு வந்தாயா? வழிதவறி நுழைந்து விட்டாயா? சொல்!" என்றான்.

அதற்கு அனுமார் இராவணன் பக்கம் நோக்கியவாறு "என்னை இந்திராதி தேவர்களோ, விஷ்ணுவோ, பிரம்மாவோ அனுப்பவில்லை. நான் பிறவியிலேயே வானரம்தான்! லங்காதிபதியான உன்னை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலினால் நான் இங்கு வந்தேன். உன்னைப் பார்க்க வேண்டும் என்றால், எளிதில் பார்க்க விடமாட்டார்கள். அதனால்தான் அசோகவனத்தை அழித்து, அசுரர்களைப் பந்தாடினேன். என்னுடைய தற்காப்புக்காக உன்னுடைய அசுரர்களில் பலரைக் கொன்றேனே தவிர, மற்றபடி எனக்கு யாரையும் கொல்லும் நோக்கமில்லை. பிரம்மாவின் வரத்தினால், என்னை எந்த அஸ்திரமும் எதுவும் செய்யாது.  நான் இராமருடைய தூதன்.

உனக்கு நற்புத்தி புகட்டுவதற்காகவே வந்தேன். தசரதனுடைய மகன் இராமர். தன் மனைவி சீதாதேவியுடனும், தம்பி இலட்சுமணனுடனும், தந்தையின் கட்டளைக்கேற்ப வனம் சென்றனர். தண்டகாரண்யத்தில் அவர்கள் இருந்த போது, சீதை காணாமற்போனாள். தேவியைத் தேடியலைந்த இராமர் ருஸ்யமுக பர்வத்தில் எங்கள் ராஜாவான சுக்ரீவனை சந்தித்து, அவருடன் நண்பன் ஆனார். அவருடைய சகோதரன் வாலியைக் கொன்று, இராமர் சுக்ரீவனுக்கு ராஜ்யத்தை மீட்டுத் தந்தார்.

அந்த நன்றிக்கடனைத் தீர்க்க, சுக்ரீவன் சீதையை தான் தேடித் தருவதாக வாக்களித்துள்ளார். பிறகு எங்கள் ராஜாவான சுக்ரீவனின் ஆணைப்படி நான் சீதையைத் தேடி வந்த போது இறுதியில் உன்னுடைய நாட்டை அடைந்தேன். உன்னுடைய அசோகவனத்தில் தேவியை சற்றுமுன் பார்த்தேன். உன்னுடைய வீரத்திற்கும், புகழுக்கும் புறம்பாக இராமரின் மனைவியை நீ சிறைப்பிடித்து வைத்திருக்கிறாய். உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தேவியை இராமரிடம் ஒப்படைத்து விடு! அதுதான் உனக்கு நல்லது! நான் தூதனாக வந்துள்ளேன். அதனால் நான் உன் நன்மையை உத்தேசித்துச் சொல்கிறேன். தயவு செய்து தேவியை விட்டு விடு!" என்றார்.
  

ஒரு வானரம் தனக்கு புத்திமதி சொல்ல முற்பட்டதையெண்ணிக் கொதித்தெழுந்த இராவணன் உடனே அனுமாரைக் கொல்லுமாறு கட்டளைஇட்டான். ஆனால் விபீஷணன் இடைமறித்து, "அண்ணா! தூதனாக வந்தவனைக் கொல்வது ராஜதர்மம் இல்லை. இந்த வானரம் நம் வீரர்கள் பலரைக் கொன்றிருக்கிறது. அதனால் இதை தண்டிக்காமல் விடுவது சரியில்லை. மரண தண்டனையைத் தவிர மற்ற ஏதாவது தண்டனைகள் அளிக்கலாம்" என்றான்.
அதற்கு இராவணன், "நீ சொல்வது சரிதான்! வானரங்களுக்குத் தன் வாலைப்பற்றிய கர்வம் உண்டு. அதனால் இந்த வானரத்தின் வாலைத் தீயிட்டு கொளுத்தி, தெருக்களில் ஊர்வலமாகக் கொண்டு செல்லுங்கள்" என்றான்.


உடனே அசுர வீரர்கள் அனுமாரின் வாலில் ஏராளமான துணிகளைச் சுற்றி விட்டுத் தீ வைத்தனர். பிறகு அனுமாரைத் தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். ஆனால் அனுமார் அதைப் பொருட்படுத்தவில்லை.
உடனே சில அரக்கிகள் சீதையிடம் சென்று, "உன்னிடம் பேசிவிட்டுச் சென்ற வானரத்தின் கதி என்ன ஆயிற்று தெரியுமா? அதனுடைய வாலில் தீ வைத்துத் தெருத்தெருவாக இழுத்துச் செல்கின்றனர்" என்றனர்.

அதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட சீதை, "நான் பதிவிரதை என்பது உண்மையானால் அனுமாரை நெருப்பு ஒன்றும் செய்யாமல் இருக்கட்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டாள்.

அவள் அவ்வாறு பிரார்த்தனை செய்து கொண்டவுடன், அனுமாரின் வாலில் பற்றியெரிந்த தீ இன்னும் பிரகாசமாகக் கொழுந்து விட்டு எரிந்தது. ஆனால் அனுமாருக்கு சுடவேயில்லை. தெருக்களை வேடிக்கை பார்த்தது போதும் என்று எண்ணிய அனுமார், தன் கைகளைக் கட்டியிருந்த கயிற்றை அறுத்தெரிந்தார். தன் உருவத்தை மிகவும் பெரிதாக்கிக் கொண்டு ஒரு பெரிய தூணைப் பிடுங்கி, அருகிலிருந்த அரக்கர்களை அடித்துத் துவைத்தார். வானில் பறந்து சென்று அரண்மனை, மற்றும் பெரிய மாளிகைகளுக்கு தன் வாலிலுள்ள தீயினால் நெருப்புப் பற்ற வைத்தார். பிறகு ஒரு வீடு பாக்கி வைக்காமல் எல்லா வீடுகளுக்கும் தீ வைத்தார். இந்திரஜித், ஜம்புமாலி, சுமாலி ஆகிய ஒருவருடைய வீட்டையும் விட்டு வைக்கவில்லை.

விபீஷணனுடைய வீட்டைத் தவிர, மற்ற அத்தனை வீடுகளுக்கும் தீ வைத்தார். இலங்கையே சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிய, வாயு பகவான் அந்தத் தீ பரவ தன்னால்இயன்ற உதவி செய்தார். இலங்கை இன்னும் பலமாகத் தீப்பிடித்து எரிந்தது.

தங்களுடைய வீடுகளைக் காப்பாற்ற அசுரர்களால் முடியவில்லை. தீப்பிழம்புகளுடன் எரியும் இலங்கைப் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. அசுரர்களுடைய கூக்குரல் அங்குள்ள நிலைமையை இன்னும், பயங்கரமாக ஆக்கியது.


பறந்து கொண்டே சமுத்திரத்தை அடைந்த அனுமார் நீரில் முக்கி தீயை அணைத்தார்.  இலங்கை முழுவதும் தீப்பற்றி எரிவதைத் திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்த அனுமாருக்கு திடீரென ஒரு பயங்கர சந்தேகம் ஏற்பட்டது.

இலங்கை முழுவதும் தீப்பற்றி எரிந்தால், சீதையின் கதி என்னவாகும்? ஐயோ, முன்பின் யோசிக்காமல் இலங்கை முழுவதும் தீவைத்து விட்டோமே என்று பதைபதைத்துப் போனார். அரண்மனையில் வைத்த தீ அசோகவனத்திற்கும் பரவியிருந்தால் சீதையின் கதி என்ன ஆயிருக்குமோ என்று பயம் ஏற்பட்டது. ஆகா! இவ்வளவு தூரம் திருப்திகரமாகக் காரியம் செய்து விட்டுக் கடைசியில் தன் அவசர புத்தியினால் காரியத்தைக் கெடுத்து விட்டோமே என்று தன் மீதே கோபம் ஏற்பட்டது.

பிறகு தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார். வந்த வேலையில் இதுவரை எல்லாம் நன்றாக முடிந்திருக்கும்போது, தேவியும் பத்திரமாகவே இருப்பாள் என்று தோன்றியது. என்னுடைய வாலில் பற்ற வைத்த தீ என் வாலை எரிக்காதபோது, மகாப்பதிவிரதையான சீதையை அக்னி தேவன் அண்டியிருக்கவே முடியாது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இவ்வாறு தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்ட பிறகும், அனுமாருடைய மனம் அலை பாய்ந்தது. ஒருக்கால் சீதையை நேருப்பு தீண்டியிருந்தால், இராமரிடம் சென்று என்ன பதில் சொல்வது?

சுக்ரீவனிடம் எப்படி முகத்தைக் காட்டுவது? ஆகா! இராமர் என் மீது வைத்த நம்பிக்கையைக் குலைத்து விட்டேனோ? இவ்வாறு ஒருபுறம் நம்பிக்கையும், ஒருபுறம் சந்தேகமும் அவர் மனத்தை மாறி மாறித் தாக்க, அவர் பெருத்த சஞ்சலத்தையடைந்தார். அப்போது ஓர் அசரீரி கேட்டது. சீதை பத்திரமாக இருப்பதாக அது கூறியதும், அனுமார் நிம்மதியடைந்தார்.   

 (தொடரும்)

சுந்தர காண்டம் - 5

அந்தக் காக்கை இந்திரனுடைய பிள்ளை! மிக சக்தி வாய்ந்தவன்! அப்படியிருந்தும் தன்னால் பிரம்மாஸ்திரத்தைத் தாக்குப் பிடிக்க முடியாது என்று பயந்து ஓடினான். அவன் ஓடுமிடமெல்லாம் அஸ்திரம் அவனைத் துரத்தியது. இந்திரனும், மற்ற எந்த தேவர்களும், ஒருவராலும் அவனைக் காப்பாற்ற இயலவில்லை. கடைசியில் அவர் இராமரிடம் மன்னிப்புக் கேட்க, அவரும் மன்னித்து விட்டார். ஆனால் ஒருமுறை ஏவிவிட்டால், பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப் பெற இயலாது. அதனால் பிரம்மாஸ்திரம் அவன் இடது கண்ணில் பாய்ந்துக் குத்தியது. அவனும் ஒரு கண் பார்வையை இழந்தான்.
 
மேற்கூறிய நிகழ்ச்சியைக் கூறிய சீதா, "இத்தனைப் பராக்கிரம் வாய்ந்த புருஷன் எனக்கிருந்தும், என்னை இராவணன் அபகரித்தானெனில் அது நான் செய்த பாவம்தான்!" என்று விம்மினாள். அனுமார் சீதைக்கு சமாதானம் கூறிவிட்டு, பிறகு திரும்பிப் போய் இராமரிடம் என்ன சொல்வது என்று கேட்க, "எந்நேரமும் அவர் நினைவாகவே இருக்கிறேன் என்று சொல்" என்று கூறிய சீதை, பிறகு தன் சூடாமணி மோதிரத்தை எடுத்து அதை அனுமாரிடம் கொடுத்து, "அவர் அணிவித்த மோதிரம் இது! இதை அவரிடம் காட்டு!" என்றாள்.

பிறகு சீதையிடம் இராமர் விரைவிலேயே வானரப்படையுடன் வந்து இராவணனைக் கொன்று தேவியை விரைவிலேயே விடுதலை செய்வார் என்று மீண்டும் தையம் அளித்துவிட்டு விடைப்பெற்றார்.
 
உடனே இராமரிடம் திரும்பிச் செல்வதற்கு முன், தான் இலங்கை வந்ததன் அடையாளமாக ஏதாவது செய்துவிட்டு, இராவணனுக்கு வானரங்களின் பலத்தை உணர்த்தவேண்டும் என்று அனுமாருக்குத் தோன்றியதால், சீதை தங்கியிருந்த அசோகவனத்தை அழிக்க முற்பட்டார். தன் உருவத்தை மிகப் பெரிதாக்கிக் கொண்டு, அசோகவனத்திலிருந்த மரங்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கியெறியத் தொடங்கினார். அனுமார் செய்த அமர்க்களத்தைக் கண்டு பயந்துபோன ராட்சஸப் பெண்கள் சீதையைக் சூழ்ந்துகொண்டு, "மானிடப்பெண்னே! அந்த வானரம் யார்? உன்னோடு அது பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். நீ என்ன பேசினாய்?" என்று பல கேள்விகள் கேட்டனர்.
 
"அது யாரென்று எனக்கு தெரியாது. என்னுடன் பேசியது உண்மைதான்! ஆனால் என்ன பேசிற்று என்று புரியவில்லை. ஒருவேளை உங்களைப்போல் ஒரு அரக்கன் வானர உருவத்தில் வந்திருக்கலாம்" என்றாள் சீதை. சீதை சொன்னதை அவர்கள் நம்பவில்லை. அந்த அரக்கிகள் இராவணனிடம் ஓடிச் சென்றனர்.
 
"பிரபு! பயங்கரமான வானரம் ஒன்று நமது அசோகவனத்தில் புகுந்து அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது. அது சீதையிடம் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்தோம். சீதையிடம் அதைப் பற்றிக் கேட்டால் தனக்குத் தெரியாது என்று சொல்கிறாள். நீங்கள் உடனே நம் ஆட்களை அனுப்பி வானரத்தைப் பிடியுங்கள்" என்று பரபரப்புடன் கூறினர்.
 
அதைக்கேட்ட இராவணன் கோபமுற்று, உடனே எண்பதாயிரம் ராட்சஸர்களை அனுப்பி அனுமாரை உயிரோடு பிடித்து வரச் சொன்னான். உடனே, ராட்சஸப்பட்டாளம் அசோகவனத்திற்குச் சென்று அனுமாரை சூழ்ந்து கொண்டது. அவர்களைக் கண்ட அனுமார் தன் வாலை ஓங்கித் தரையில் அடித்துவிட்டு, உரத்த குரலில், "ராம, இலட்சுமணர்கள் வாழ்க! நான் இராமருடைய தாசன்! என் பெயர் அனுமார்! என் எஜமானருக்காக உயிரையும் கொடுப்பேன்.

உங்களையெல்லாம் கொன்று குவித்து, உங்கள் மன்னனான இராவணனை வீழ்த்தி, இந்த இலங்கையை சர்வ நாசம் செய்துவிட்டு எங்கள் தேவியை மீட்டுச் செல்லப் போகிறோம்" என்று கர்ஜித்தார். மகாமேருவைப் போல் உயர்ந்து நின்று தங்களை நோக்கி சிம்மக் குரலில் சவால்விட்ட அனுமாரைக் கண்டதும் அவர்களுக்கு பயம் ஏற்பட்டது. ஆயினும் இராவணனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தினால், அவர்கள் தங்கள் ஆயுதங்களை அனுமார் மீது வீசிக் காயப்படுத்த முயல, அவர் ஒரு பெரிய தூணை பெயர்த்தெடுத்து ராட்சஸர்களிடையே புகுந்து சூறாவளி வேகத்தில் தாக்கினார்.
 
தங்களால் அனுமாரைத் தாக்குப் பிடிக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட சில ராட்சஸர்கள் ஓடிச்சென்று, பெரும்பாலான ராட்சஸர்கள் அனுமாரால் கொல்லப்பட்டதைச் சொன்னதும் கோபமுற்ற இராவணன், அஜயன் மற்றும் ஜம்புமாலியை அனுப்பினான். அஜயன் ஒரு பெரிய ராட்சஸப் படையுடன் அங்கு வந்து அனுமாரைப் பிடிக்க முயல, அவர் வசந்த மண்டபத்திலிருந்த மற்றொரு தூணை எடுத்து தாக்க, நூற்றுக்கணக்கான இராட்சஸர்கள் மடிந்தனர்.
 
பிறகு அவர் கம்பீரமான குரலில், "அட ராட்சஸப் பதர்களா! என் ஒருவனையே உங்களால் சமாளிக்க முடியவில்லையே! என்னைப்போல் ஆயிரக்கணக்கான வானரங்கள் உங்கள் நாட்டை விரைவிலேயே முற்றுகையிட வருகின்றன. அவற்றுக்கு முன்னால் உங்களால் என்ன செய்ய முடியும்? இராமரிடம் பகைமை பாராட்டும் உங்கள் அறிவீனத்தை என்னவென்று சொல்வது?" என்று கர்ஜித்தார்.
 
அப்போது சிவப்பு மலர்கள் அணிந்த கழுதைகள் பூட்டிய இரதத்தில் இராவணனால் அனுப்பப்பட்ட ஜம்புமாலி அங்கு வந்தான். அம்பு எய்வதில் வல்லவனான ஜம்புமாலி, முதலில் சரசரவென அம்புகளை அனுமார் மீது எய்தான்.

உடனே அனுமார் பெரிய மரங்களைப் பிடுங்கி அவன் மீது வீச, அவற்றை ஜம்புமாலி தன் அம்புகளால் தடுத்தான். பிறகு அனுமார் இரும்புத்தூணைப் பிடுங்கி, அவனை மூர்க்கமாகத் தாக்கிக் கொன்றார்.
 
ஜம்புமாலியும் கொல்லப்பட்டது இராவணனுக்கு வியப்பையளித்தது. சகல அஸ்திரப் பிரயோகங்களிலும் தேர்ந்த தன் மந்தி குமாரர்களை அனுப்பி அனுமாரை சிறைப்பிடிக்கக் கூறினான். அவர்கள் தங்கள் படைகளைக் கூட்டிக் கொண்டு அனுமாரைப் பிடிக்க வந்தனர். இம்முறை வானில் அங்குமிங்கும் பறந்து வந்த அனுமார், மந்தி குமாரர்களையும் அவர்களுடைய படை வீரர்களையும் கைகளினால் அடித்தும், கால்களினால் உதைத்துமே கொன்று தீர்த்தார்.
 
அனுமான் வலிமையைப் பற்றிக் கேட்டதும், இராவணனுக்கு சற்று பயம் ஏற்பட்டது. ஆனால் தன் பயத்தினை வெளிக்காட்ட விரும்பாத இராவணன் மற்ற வலிமைமிக்க ராட்சஸர்களான விரூபாட்சன், காபாட்சன், தர்தரன், புகஸன், மாசகர்ணன் ஆகிய உபதளபதிகளை அனுப்பினான். அவர்கள் செல்லுமுன், "நீங்கள் வானரம் தானே என்று அலாட்சியமாக இருந்துவிடாதீர்கள். பலசாலிகளான வாலி, சுக்ரீவன், நீலன் ஆகிய வானரங்களை இதற்கு முன் நான் பார்த்திருக்கிறேன். இந்த வானரம் அவர்களை விட பலசாலி என்று தோன்றுகிறது. இது வானரம்தானா என்ற சந்தேகம் கூடத் தோன்றுகிறது. வானர உருவத்தில் உள்ள பூதமாகக் கூட இருக்கலாம். இந்த வானரத்தைப் பிடித்தேயாக வேண்டும். மிகவும் பலசாலியாகத் தோன்றும் இதை சாமர்த்தியமாகப் பிடியுங்கள்" என்று அறிவுரை கூறியனுப்பினான்.
 
உடனே அந்த ஐந்து ராட்சஸர்களும் அசோகவனத்திற்கு வந்து அனுமாரை அணுகினர். அனுமாரை நாற்திசையிலும் சூழ்ந்து கொண்ட பிறகு அவர்கள் அவர்மீது அம்புகள் எய்யத் தொடங்கினர். துர்தரன் அனுமார் தலையில் ஐந்து அம்புகளை செலுத்தினார். உடனே தன் உடலை மிகப் பெரிதாக்கிக் கொண்ட அனுமார், வானத்தில் எம்பி நேராக துர்தரன் தலை மீது குதித்தார்.

அதில் துர்தரன் உயிர் நீத்தான். உடனே விரூபாட்சன் கோபத்தோடு அனுமார் மீது பாய்ந்து அவரைத் தன் கதையால் தாக்கினான். அனுமார் ஒரு மரத்தைப் பிடுங்கி ஒரேயடியில் அவனைத் தீர்த்துக் கட்டினார்.
 
பிறகு மற்றவரையும் அனுமான் மரத்தினால் தாக்க, பதிலுக்கு அவர்கள் தங்கள் வாட்களை உருவி ஏக காலத்தில் அனுமரைத்தாக்க, அந்த கடுமையான தாக்குதலில் அனுமாருக்கு காயங்கள் உண்டாயின. அவர்கள் மற்றவர்களை விட வலிமை வாய்ந்தவர்கள் என்றும், சாதாரண மரங்களினால் அடித்து அவர்களை நசுக்க முடியாது என்றும் உணர்ந்த அனுமார், அந்த வனத்தின் மூலையில் இருந்த ஒரு குன்றை அடியோடு பெயர்த்து எடுத்து அவர்கள் மீது வீச, அவர்கள் மொத்தமாக இறந்தனர். அதன்பிறகு இராவணனால் அனுப்பப்பட்ட பிரதான், பாஸ்கரன் என்ற ராட்சஸர்கள் அனுமார் மீதுபாய, அவர்களையும் மலையால் தாக்கினார்.
 
இவ்வாறு இராவணன் அனுப்பிவைத்த வலிமை வாய்ந்த உபதளபதிகளை அனுமார் இருந்த இடம் தெயாமல் அழித்து விட்டார். விஷயம் அறிந்த இராவணனுக்குத் திகைப்பிலிருந்து மீளவே சற்று நேரம் பிடித்தது. ஒரு வானரத்திற்காகத் தன் மிகச்சிறந்த தளபதிகளை அனுப்பலாமா, வேண்டாமா என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.

இராவணனின் பார்வை தன் மகன் அட்சன் மீது சென்றது. தன் தந்தை வாயைத் திறந்து தனக்குக் கட்டளையிடுமுன் அட்சன் எழுந்து நின்றான். தங்கத்தினாலான தன் வில்லை எடுத்துக் கொண்டவன், தன்னுடைய தங்க ரதத்தை வரவழைத்தான். அந்த ரதத்தில் போருக்கு வேண்டிய எல்லா ஆயுதங்களும் வைக்கப்பட்டிருந்தன. அட்சனுடன் ஒரு பெரிய படை அனுமாரைப் பிடிக்க சென்றது.
 
ஆனால் அனுமாரைப் பார்த்தவுடனேயே, அவர் பெரிய பராக்கிரமசாலி என்பதை அவன் புரிந்து கொண்டான். இருப்பினும் அட்சன் அவரோடு முழுமூச்சுடன் கடுமையாகப் போட்டான். இதுவரை தன்னோடு மோதிய அரக்கர்களிலேயே அட்சன் அதிபராக்கிரமசாலியாகத் திகழ்ந்ததைக் கண்ட அனுமார் அவனை மனத்திற்குள் மெச்சினார். அவன் தன்னை நோக்கிச் செலுத்திய பாணங்களிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சி எடுத்துக்கொண்ட அதேசயம், இவனைப் போன்ற நல்ல வீரனைக் கொல்ல மனமில்லால் தவித்தார். ஆனால் இவனைக் கொன்றுவிடத்தான் வேண்டும் என்று அவனோடு உக்கிரமாகப் போரிடத் தயாரானார்.
 
அட்சன் தன் ரதத்துடன் ஆகாயத்தில் பறந்து கொண்டே, அங்கிருந்தே அம்புகளை அனுமார் மீது பொழிந்தான். உடனே அனுமார் அந்தக் குதிரைகளை கைகளினாலேயேப் பற்றி கீழேயிழுத்துத் கொல்ல, அட்சனின் ரதம் தரையில் விழுந்தது. அடுத்ததாக அனுமார் அவனுடைய ரதத்தைத் தன் கைகளினால் உடைத்தார். உடனே, அட்சன் தன் ரதத்தை விட்டுவிட்டு ஆயுதங்களுடன் வானில் பறந்தான். அனுமார் எம்பிக் குதித்து வானில் பறந்த அவனுடைய கால்களைப் பிடித்துக் கொண்டு கீழேயிழுத்தார். அட்சன் தரையில் விழுந்தான். அவனைத் தூக்கிய அனுமார் அவனை தட்டாமாலை சுற்றித் தரையில் அடிக்க, அட்சன் இறந்தான்.

சுந்தர காண்டம் - 4

அசோகவனத்தில் தனிமையில் தவித்துக் கொண்டிருந்த சீதை இராமரிடமிருந்து ஒரு தகவலும் கிடைக்கப் பெறாமல் விரக்தியின் எல்லைக்கே சென்றுவிட்டாள். இவ்வாறு எத்தனை நாள்தான் காலம் கடத்துவது? ஒருநாள் பொறுமை இழந்து இராவணனே தன்னைக் கொன்று விடலாம்! அல்லது தன்னைச் சுற்றியுள்ள ராட்சஸிகள் அவனுடைய கட்டளையின் பேரில் தன்னைக் கொன்றுவிடலாம். அதற்கு முன் நாமே நிம் உயிரை மாய்த்துக் கொள்வோம்! இவ்வாறு எண்ணிய சீதை தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தாள்.
 
திடீரென சீதையின் இடது கண் துடித்தது. இடது கண் துடித்தால் நில்லது நிடக்கும் என்ற நிம்பிக்கை உண்டு. அதனால் சீதை தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயங்கினாள். அதே அசோகமரத்தில்தான் அனுமார் உட்கார்ந்திருந்தார். அவர் வேறு விதமாகத் தவித்துக் கொண்டிருந்தார்.
 
அசோகமரத்தினடியில் வித்த கூந்தலும், கண்ணீரும் கம்பலையுமாய் இருப்பவள்தான் சீதை என்று உறுதியாகத் தெரிந்து விட்டது. அவளிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, இராமன் தூதர் நான் என்ற செய்தியைச் சொல்லி விட்டுப் போகலாம் என்று துடித்தார். மறுகணம் சீதையைப் பார்த்ததே போதும் என்ற செய்தியை உடனே சென்று இராமரிடம் சொல்லிவிடலாம் என்றும் தோன்றியது.

ஆனால் இத்தனை சிரமப்பட்டு இலங்கைக்கு வந்து தேவியைப் பார்த்து விட்டு அவளோடு பேசாமல் போனால் நன்றாக இருக்குமா? அவளைச் சந்திக்காமல் போனால், இராமரே ஒரு வேளை தன்னை ஏன் சீதையை சந்திக்கவில்லை என்று கேட்கலாம். அதற்கு என்ன பதில் சொல்வது? அவரைச் சந்தித்து அவருக்கு தைரியம் கூறுவதுதான் நல்லது! ஆனால் சீதை தன்னை முன்னே பின்னே பார்த்ததில்லை. நான் யாரென்றே நம்புவாளா? இராவணனே வேறு உருவம் எடுத்து வந்திருக்கிறான் என்று நினைக்க மாட்டாளா? தேவியை தான் இராமதூதன் என்பதை எப்படி நம்ப வைப்பது? இவ்வாறு பலவாறு சிந்தித்த அனுமார் குழம்பிப் போனார். கடைசியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னை நன்றாகக் கிளைகளுக்குள் மறைத்துக் கொண்டு சீதையின் காதுகளுக்கு மட்டும் எட்டும்படி இராமன் வரலாற்றை கூறத் தொடங்கினார்.
 
"தசரதர் என்ற சக்கரவர்த்திக்கு, இராமர் என்ற மிக உத்தமமான ஒரு மைந்தன் உண்டு. தன்னுடைய தந்தையின் கட்டளையை சிரமேற்கொண்டு, அவர் தன் தம்பியுடனும், மனைவியுடனும் வனம் சென்றார். அங்கு அவர் கரன் முதலிய நூற்றுக்கணக்கான ராட்சஸர்களைக் கொன்றார். அதையறிந்த இராவணன் கபட சந்நயாசி வேடம் பூண்டு இராமரும், இலட்சுமணரும் இல்லாத சமயம் பார்த்து, சீதை தேவியை அபகத்தான். அதையறிந்த இராமர் துடித்துப் போய் அழுது, புலம்பிக்கொண்டே அவளைத் தேடிக் கொண்டே திரிந்தபோது, சுக்ரீவன் என்ற வானர ராஜனின் நிட்பு கிடைத்தது. அவனுடைய தமையனான வாலியைக் கொன்று, சுக்ரீவனை ராஜாவாக்கி, அவனிடம் தன் மனைவியை மீட்க உதவி கோரினார். சுக்ரீவன் தன் வானரப் படையை நான்கு திசைகளிலும் அனுப்பி வைத்தார். அவ்வாறு தென் திசை நோக்கி வந்த வானரர்களில் நானும் ஒருவன்!
 
இவ்வாறு அனுமார் சொல்லி முடித்ததும், அதை ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்த சீதை வியப்பு உடன் மேலே அண்ணாந்துப் பார்த்தாள்.

அங்கு அவள் மரத்தில் கிளைகளினூடே மறைந்திருந்த அனுமாரைக் கண்டாள். அவளுக்குத் தான் கண்டதை நம்ப முடியவில்லை. அனுமாரை தன் கனவில் தோன்றிய குரங்கு என்று நினைத்தாள்.
 
அதற்குள் அனுமார் மரத்திலிருந்து குதித்து, மிகவும் வினயத்துடன் சீதை முன் நின்று, "தேவி! நான் தேடி வந்தது உங்களைத் தான் என்று நம்புகிறேன். கிழிந்த புடைவையும் அழுத முகமாக வாடி நிற்கும் நீங்கள்தான் இராமரைப் பிரிந்த அவருடைய பத்தினி என்று நினைக்கிறேன். என்னுடைய ஊகம் சரிதானே?" என்றார்.
 
"ஆம்! நான்தான் அந்த அபாக்கியவதி சீதை! இராவணன் வஞ்சகமாக என்னைக் கடத்திக் கொண்டு வந்து விட்டான். இராமர் என்னை மீட்க வருவார் என்ற நம்பிக்கையில் நான் இன்னும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள்.
 
கண்ணீர் வடித்துக் கொண்டே சீதை கூறியதைக் கேட்ட அனுமான் நெஞ்சம் உருகியது. "தேவி! நான் இராமருடைய தூதனாக உங்களைக் காண வந்தள்ளேன். இராமர் கட்டாயம் உங்களை மீட்க வருவார் என்ற நல்ல விஷயத்தைக் கூறவே நான் உங்களைத் தேடிவந்தேன். நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்ற தகவலை அவரிடம் சொல்லுவேன்" என்றார்.
 
அதைக்கேட்டதும் சீதைக்கு மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாயின. ஆனால் மறுகணவே திடீரென்று அவள் மனத்தில் சந்தேகம் பிறந்தது. இராவணன் மாயாஜால வித்தைகளில் கை தேர்ந்தவன் என்பது அவளுக்குத் தெரியும். இராவணன்தான் ஒருவேளை வானர வடிவம் எடுத்து வந்திருக்கிறானோ என்ற சந்தேகம், பயம் உண்டாக அவள் அனுமாரை நோக்கி, "இல்லை! இல்லை! நீ பொய் சொல்கிறாய்! நீ இராமதூதனில்லை! நீ இராவணன்! வானர உருவத்தில் வந்து என்னை ஏமாற்றப் பார்க்கிறாய். என்னை ஏன் வீணாகத் தொந்தரவு செய்கிறாய்? நீ உண்மையிலேயே இராமதூதன் என்றால் அதை நிரூபித்துக் காட்டு! இல்லையேல் நீ சொல்வதை நம்ப மாட்டேன்" என்று வாதம் செய்ய ஆரம்பித்தாள்.

உடனே அனுமார் பொறுமையாக இராமன் குணநிலன்களைப் பற்றி விளக்கிக் கூறினார். இராமருடைய உருவத்தை வர்ணித்தார். சீதையைப் பிரிந்ததிலிருந்து, இராமர் அவளை காடு, மேடுகளில் எல்லாம் தேடி அலைந்ததைப் பற்றி விவத்தார். சீதையைப் பிரிந்து அவர் புலம்பித் துடித்ததை வர்ணித்தார். கடைசியாக, இராமர் கொடுத்த மோதிரத்தை அவளிடம் அளித்தார்.
 
அப்போதுதான் சீதைக்கு அனுமார் மீது நம்பிக்கை உண்டாயிற்று அனுமார் சத்திரத்தைத் தாண்டி இலங்கை வந்தடைந்த சாகசத்தை எண்ணி வியந்தாள். இராமடம் அவர் கொண்டிருந்த பக்தியினால்தான் அத்தகைய சாகசங்களை செய்ய முடிந்தது என்று எண்ணி வியந்தாள். அனுமாரைப் போன்ற சக்திசாலியின் துணையிருக்கையில், தன் கணவரால் இராவணனைக் கொன்று தன்னை மீட்க முடியும் என்ற நிம்பிக்கை பிறந்தது. ஆனால் அப்படியும் அவளுடைய சந்தேகங்கள் தீரவில்லை.
 
"தேவி! இராமர் தங்களை ஒரு கணம் மறக்கவில்லை. நீங்கள் இல்லாமல் அவருக்கு ஊண், உறக்கமில்லை. உங்களைச் சந்திக்க ஒவ்வொரு கணம் துடித்துக் கொண்டிருகிறார்" என்று அனுமார் கூறிய பிறகே சீதைக்கு சந்தேகங்கள் தீர்ந்தன.
 
அப்படியும் அவளுடைய கவலைகள் தீரவில்லை. தன்னை மணந்து கொள்ள சீதைக்கு இராவணன் ஒரு வருட காலம் கெடு வைத்திருந்தான். அதில் பத்து மாதங்கள் கழிந்து விட்டன. எஞ்சிஇருக்கும் இரண்டே மாதங்களில் இராமர் தன்னை மீட்கவேண்டுமே என்று கவலைப்பட்டாள். இலங்கையில் விபீஷணன், அவன் மனைவி, அவனுடைய மகள் நிலா ஆகியோரைத் தவிர யாரும் அவளிடம் நட்புப் பாராட்டவில்லை.
 
உடனே அனுமார், "தேவி! உங்கள் கவலை அதுதான் என்றால் தாமதம் செய்யாதீர்கள், ஒரு வார்த்தை சொல்லுங்கள்! நான் உங்களை என் தோளில் சுமந்து கொண்டு சென்று இராமடம் சேர்ப்பிக்கிறேன்" என்றார்.

அவர் சொல்லை நம்பாத சீதை, "உன்னால் என்னை எப்படிச் சுமந்து செல்ல முடியும்?" என்று கேட்க, அனுமார் உடனே தன் உருவத்தை மிகப் பெரிதாக ஆக்கிக் கொண்டார்.
 
"தேவி! உங்களை மட்டுமல்ல! இந்த இலங்கையையே இந்த அனுமார் தன் தோளில் எடுத்துச் செல்ல முடியும்" என்றார்.
 
ஆனால் சீதை அந்த யோசனையைப் புறக்கணித்து விட்டாள். "நீ என்னைச் சுமந்து செல்வது சரியல்ல! திருட்டுத் தனமாக யாருக்கும் தெரியாமல் உன்னுடன் இலங்கையை விட்டு வெளியேறுவது இராமருடைய மனைவிக்கு அழகல்ல! நானும் வீர வம்சத்தில் தோன்றியவள்! இவ்வாறு செய்தால், அது இராமருடைய வீரத்திற்கும், என்னுடைய தந்தை ஜனகன் பெயருக்கும் அவமானத்தைத் தேடித்தரும். என் கணவர் நேருக்கு நேர் இராவணனுடன் போட்டு அவனை வென்று, அதன் பிறகு ஊரறிய என்னை மீட்பதே அவருக்கு கௌரவமாக இருக்கும்!" என்றாள்.
 
"சரி தேவி! உங்களைப் பார்த்து விட்டேன் என்று சொன்னாலே போதும். அதைக் கேட்டு இராமருக்கு அளவற்ற ஆறுதல் உண்டாகும்.

ஆனால் நான் உங்களைச் சந்தித்தேன் என்று சொன்னால் அதை இராமர் நம்ப வேண்டும்! அதற்கு நீங்கள்தான் ஏதாவது விவரங்களை கூறி எனக்கு உதவ வேண்டும்" என்றார் அனுமார்.
 
உடனே சீதைத் தனக்கும் இராமருக்கும் மட்டுமே தெரிந்த ஓர் அந்தரங்க நிகழ்ச்சியைக் கூறினார். ஒரு சமயம் அவர்கள் சித்திரக்கூட பர்வதத்தில் தங்கியிருந்தனர். ஒரு நாள் இராமரும், சீதையும் மட்டும் தனியே உலாவச் சென்றனர். வெகுதூரம் நடந்ததால் களைப்படைந்த சீதை, இராமரை உட்காரச் சொல்லி அவர் மடியில் அமர்ந்து கொண்டாள். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு காக்கை சீதையைப் பார்த்து அவளை நெருங்கியது.
 
அவளைச் சுற்றி வட்டமிட்ட காக்கை அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம் அவள் மார்பைக் கொத்தி விட்டது. கோபம் கொண்ட சீதை அதைத் துரத்தி விட்டாள். ஆனால் அது போகாமல் மீண்டும் அவளிடம் நெருங்கியது. மீண்டும் அதைத் துரத்த, மறுபடியும் அது அவளிடமே வந்தது.
 
தன் மனைவியை மீண்டும் மீண்டும் வட்டமிடும் காக்கையைக் கண்ட இராமர் அவளைத் தன் மடியில் வைத்து பாதுகாப்பாக அணைத்துக் கொண்டார். சற்று நேரம் கழித்து, சீதை அவர் மடியில் படுத்து உறங்கிப் போனாள். சீதை எழுந்ததும் இராமர் சீதையின் மடியில் தலை வைத்து உறங்கினார். அப்போது காக்கை மீண்டும் வந்து சீதையை நெருங்கி பலமாகக் கொத்த, சீதை துடித்தாள். திடுக்கிட்டு எழுந்த இராமர் காக்கையின் அலகில் இரத்தம் தோய்ந்திருப்பதையும், சீதையின் மார்பில் இரத்தம் வடிவதையும் கண்டார்.
 
இராமர் உடனே சீதையை இரத்தம் வழியக் கொத்திய காக்கையின் மீது கடுங்கோபம் கொண்டார். அப்போது தன் கையில் வில், அம்பு எதுவுமில்லாததால் அருகிலிருந்த ஒரு தர்ப்பைப் புல்லையெடுத்து, பிரமாஸ்திர மந்திரம் ஓதிக் காக்கையை நோக்கி வீசினார். அந்தப்புல் பிரளய அக்னியைப் போல் மின்னிக் கொண்டே காக்கையை அணுகியது.