Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday, 3 February 2014

சுந்தர காண்டம் - 2

அவ்வளவு தூரம் தன்னால் தாண்டடிந்தது குறித்து அனுமார் பெருமிதப்பட்டதோடு இன்னம் தன்னால் அதிக தூரத்தைத் தாண்டக் கூட முடியுமென நிம்பிக்கை கொண்டார். சிறிய உருவத்தை எடுத்துக் கொண்டு அவர் தொலைவில் தென்படும் இலங்கையை நோக்கிச் செல்லலானார்.
 
இலங்கையைச் சுற்றிலும் பல இரம்மியமான காட்சிகள் இருந்தன. பச்சைப்பசேலென சுற்றிலும் தென்னை ஈச்சை போன்ற மரங்களும் நில்ல வாசனையைத் தரும் தாழம்பூ, மரமல்லிகை போன்றவைகளும் எராளமாக வளர்ந்து கிடந்தன. பல அழகிய பூங்காக்கள் ஆங்காங்கு தென்பட்டன. நிகரைச் சுற்றிலும் தங்க மண்டப வீதிகளும் அதில் காவல் காக்கும் பயங்கர ராட்சசர்களும் அனுமாருக்குத் தென்பட்டனர்.
 
அங்குள்ள இராட்சசர்களைக் கண்டதும் அனுமார் "இவர்கள் எல்லாம் இந்த மாபெரும் கடலைக் கடந்துதானே இங்கு வரவேண்டும். இங்கு வந்திருக்கும் இராட்சசர்களுக்கெல்லாம் இந்த சத்திரத்தைக் கடக்கும் சக்தி இருக்கத்தானே இருக்கும்.
 
நம் வானரர்களிடையே இந்த மாபெரும் கடலைக் கடக்கக் கூடிய சக்தியுடையவர்கள் மிகச் சிலரே. விரல்விட்டு எண்ணி விடலாம். அவர்களோடு இராமரும் இலட்சுமணரும் இங்கு வந்து இந்த அரக்கர்களோடு போட்டு ஜெயிக்க வேண்டுமென்றால் எவ்வளவு சிரமம்" என எண்ணினார்.

ஆனால், தான் வந்தது சீதையைத் தேடிக் கண்டு பிடிக்கத்தானே! பிராட்டியார் இங்கு இருந்தால்தானே இலங்கை மீது படை எடுக்கும் பிரச்னையே எழும்! எனவே நகரி னுள் நுழைந்து தலில் சீதையைத் தேடலாமென எண்ணி அவர் சாதாரணக் குரங்கின் உருவத்திலேயே செல்லத் தீர்மானித்துக் கொண்டார்.
 
இருட்டு வேளையிலே தேடுவது தான் மிகவும் நில்லதென நனைத்து அவர் மாலையாகும் வரை காத்திருந்து பின்னர் அவர் பூனை போல நிடந்து இலங்கைக்குள் நுழையலானார். அந்த சமயத்தில் ஒரு பூதாகாரமான உருவம் அவரது வழியை மறித்தது.
 
அது அனுமாரைப்பார்த்து "யாரது? நல் அப்படியே! இங்கு ஏன் வந்தாய்?" எனக் கேட்டது. அதற்கு அனுமார் "நான் யாரென்பதைக் கூறுன் நீ யாரென நான் தெரிந்து கொண்டாக வேண்டும்" என்றார். அதற்கு அந்த உருவம் "நான் தான் இலங்காபுரி யின் கோட்டை வாசலை காவல் புரிபவள். என் பெயர் இலங்கிணி. என் உத்தரவு இல்லாது இந்நகரினுள் யாருமே செல்ல முடியாது" என்றது.
 
அப்போது அனுமார் "நான் இந்த இலங்கையின் அழகு பற்றிக் கேள்விப்பட்டு அதனைப் பார்க்கவே வந்தேன். சுற்றிப் பார்த்துவிட்டு நான் வந்த வழியே திரும்பிப் போய் விடுகிறேன்" என்றார். அதுகேட்டு இலங்கிணி தன் உள்ளங்கைக்குள் அனுமாரைப் பிடிக்க முயன்றாள்.
 
அனுமாரோ தனது கையை மடக்கிக் கொண்டு இலங்கிணியை ஒரு குத்து விட்டார். அவளைக் கொல்லும் எண்ணம் அவருக்கு இல்லை. தன் பலத்தைப்பற்றி ஓரளவு அவள் அறியட்டுமே என்று நனைத்தே அவ்விதம் செய்தார். ஆனால், அந்த ஒரு குத்து பட்டதுமே இலங்கிணி கை கால்கள் துடிதுடிக்கக் கீழே விழுந்து விட்டாள்.
 
அவள் அனுமாரை வணங்கி "வானர சிரேஷ்டரே, உமது பலம் எவ்வளவு என்று எனக்குத் தெரிந்து விட்டது. இனி நான் உம் வழியில் நற்கமாட்டேன். என்னைக் கொல்லாது போய்விடும். நான் உம்மிடம் தோற்று விட்டேன். பிரம்மா முன்பு கூறியபடி வானரராகிய நீர் என்னைத் தோற்கடித்துவிட்டதால் இனி இலங்கைக்குக் கேடுகாலம் பிறந்து விட்டது என்பது எனக்குத் தெரிந்து விட்டது.

சீதையைக் கவர்ந்து வந்த இராவணன் தனக்கும் மற்ற ராட்சசர்களுக்கும் அழிவையே தேடிக் கொண்டு விட்டான். இனி வெள்ளம் தலைக்குமேல் போய் விட்டது. உமது இஷ்டம்போல இந்நகரினுள் சென்று என்ன வேண்டுமானாலும் செய்யும்" எனக் கூறியது.
 
இலங்கிணியைக் கீழே தள்ளிய அனுமார் அவள் கூறியதையும் கேட்டுவிட்டு மதில் சுவர் மீதேறி இலங்கைக்குள் தமது இடது காலை தலில் வைத்தார். பின்னர் நிகன் நெடுஞ்சாலை வழியாக அவர் செல்லலானார். அங்கு வாத்தியங்கள் முழங்க, இசையொலி கிளம்ப, சிப்பும் கேளிக்கையுமாக எங்கும் இருந்தது. வீடுகளெல்லாம் பல வித மலர்களாலும் தோரணங்களாலும் அலங்கக்கப்பட்டிருந்தன. மதுவை அருந்திவிட்டு பெண்களும் உச்சஸ் தாயியில் பாடிக் கொண்டிருந்தனர்.
 
அவர் இராவணன் போன்ற க்கியமான இராட்சசர்கள் இருக்கும் பகுதியை அடைந்தார். அவர்களது மாளிகைகள் தங்கத் தகடுகளாலும், நவரத்தினக் கற்களாலும் அலங்கக்கப்பட்டிருந்தன. அவற்றின் முன் இராட்சசர்கள் பலர் நன்று காவல் புரிந்துகொண்டிருந்தனர். அவர்களது கண்களில் படாமல் அனுமார் அப்பகுதிக்குள் நுழைந்து விட்டார். ஒவ்வொரு மாளிகையின்ன் ரதம், குதிரைகளும், யானைகளும் இருந்தன. யாரைப் பார்த்தாலும் நன்கு திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு அலைந்து திரிந்து கொண்டு இருந்தார்கள்.
 
அனுமார் ஒவ்வொரு மாளிகையையும் கவனமாக முலை முடுக்கு விடாது பார்த்துக்கொண்டே செல்லலானார். பிரஹஸ்தன், மகாபார்சுவன், கும்பகர்ணன், விபீஷணன், மகோதரன், விரூபாட்சன், வித்யுத்மாலி, வச்சிர தம்ஷ்ட்ரன், சுகன், சார்ணன், இந்திர ஜித்து, ஜம்புமாலி, வச்சிரகாயன் தலிய பலரது மாளிகைகளையும் அவர் சுற்றி பார்த்துவிட்டார். அங்கெல்லாம் சீதா தேவியைக் காணவில்லை.

முடிவில் அவர் இராவணனது மாளிகைக்குள் நுழைந்தார். அங்கு பலவித உயர்ந்த சாதிக் குதிரைகளையும், யானைகளையும் கண்டார். வீட்டைக் காவல் புரியும் அரக்கர்கள் கூட உயர்ரக ஆபரணங்களை அணிந்து கொண்டு இருந்தனர். பல இடங்களில் மலர்ச்செடி வளைவுகளும், ஓவியச் சாலைகளும் கேளிக்கைக்கான இடங்களும் இருந்தன. எங்கு எப்பொருளைக் கண்டாலும் அதில் தங்கத்தையே அதிகமாகக் கண்டார். மாளிகையில் எங்கும் நிறுமணம் கமழ்ந்திருந்தது. ஓடத்தில் புஷ்பக விமானம் வைக்கப்பட்டிருந்ததையும் அவர் கண்டார்.
 
அதன் பின்னர் அவர் இராவணனின் படுக்கையறைக்குள் சென்றார். அப்போது நள்ளிர விற்கும் மேலிருக்கும், எல்லாரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அங்கு அவர் பல பெண்களைக் கண்டார். எல்லாரும் தாறுமாறாகப் படுத்திருந்தனர். சிலரது கைகளில் இசைக்கருவிகள் இருந்தன. அவர்களில் பெரும்பாலோர் மிகவும் அழகானவர்களாகவே தென்பட்டனர். அவர்கள் இராவணனது மனைவிமார்களாவர்.
 
இராவணன் ஒரு மஞ்சத்தில் படுத்துக் தூங்கிக்கொண்டிருந்தான். உடலில் வாசனைச் சந்தனம் பூசிக்கொண்டு, விலையுயர்ந்த தங்கசகை வேலைப்பாடுடன் கூடிய ஆடைகளாலும் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களாலும் தன்னை வெகுவாக அலங்கரித்துக் கொண்டு படுத்திருந்தான். அவனது பயங்கர உருவத்தைக் கண்டு அனுமார் மெதுவாக ஓடரித்திலுள்ள படிகளின் மீது ஏறி நின்று கொண்டு அந்த அறையைச் சுற்றிலும் பார்க்கலானார்.
 
அவரது பார்வை இராவணனருகே படுத்துத் துயிலும் மண்டோதாயின் மீது விழுந்தது. ஒருவேளை அப்பெண்மணிதான் சீதாதேவியோ என்ற சந்தேகம் கூட அவருக்குத் தோன்றியது. ஆனால் மறுநமிடமே இராவணனைத் திட்டி அவனை நிந்தித்த சீதாதேவி நம்மதியாகப்படுத்துக் தூங்கிக்கொண்டிருக்க முடியுமா என்ற ஐயம் அவரது மனத்தில் எழுந்தது. எனவே அந்தப் பெண்மணி சீதாதேவியாக இருக்க முடியாதென்று அவர் மனத்தில் உறுதியாகப்பட்டும் விட்டது.

அப்படியானால் சீதாதேவி எங்கே இருக்கக்கூடும்? எங்குமே தென்பட வில்லையே. ஒருவேளை துயரம் மேலிட்டு தற்கொலை புரிந்து கொண்டு விட்டாளோ? அப்படி ஆனால் இவ்வளவு கஷ்டப் பட்டுக்கொண்டு இம்முயற்சியில் இறங்கியது வீணே! ஆயினும் மனம் தளர்ந்துவிடக்கூடாது. இன்னம் தான் பார்க்காத இடம் ஏதாவது இருக்கக்கூடும். அங்கு ஒருவேளை சீதாதேவியைக் காணக்கூடுமென அவர் மனம் நிம்பியது.
 
அனுமார் தான் பார்க்காத இடங்கள் ஏதாவது இருக்கிறதாவென திரிந்து அலைந்து பார்க்கலானார். எங்கும் சீதை இருக்கவில்லை. ஒருவேளை இராவணன் வேறு எங்காயிலும் சீதையை யாருக்கும் தெரியாமல் இரகசியமாகச் சிறை வைத்து இருக்கிறானோ வென்ற ஐயம் ஏற்பட்டது. அப்படி ஆனால் சீதாதேவியைத் தேடிக்கண்டு பிடித்து விட்டுத்தான் கிஷ்கிந்தைக்குச் செல்ல வேண்டும். அந்த வேலையை நின்கு செய்து முடித்தால்தான் எல்லாருக்கும் மன நம்மதி ஏற்படும். இராமரும் ஆறுதலடைவார்.
 
அனுமார் பல இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டார். இனிப் பார்க்க வேண்டிய இடம் சற்று தூரத்தில் தெரியும் அசோகவனமே! அங்கு சென்று தேடினால் ஒரு வேளை சீதையைக் காணலாம்.

அசோக வனத்தில் மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு இருந்தன. அனுமார் அதிவேகமாக அந்த வனத்தினுள் பாய்ந்து சென்றார். அவர் சென்ற வேகத்தில் பல பறவைகள் தம் இறக்கைகளைப் படபடவென அடித்துக்கொண்டு பயந்து பறந்து சென்றன. அனுமார் அங்குள்ள மரங்களின் மீதேறி கிளைகளை ஒடித்துப்போட்டார். இலைகளைக் கிள்ளி நசுக்கி பிய்த்துப் போட்டார். கொடிகளை இழுத்துப் பிடுங்கி எறிந்தார்.
அந்த வனத்தில் பல கட்டடங்கள் இருந்தன. கேளிக்கைக்கான இடங்கள் இருந்தன. ஒரு சிறு குன்றும் அதைச் சுற்றிலும் மரங்களும் இருந்தன. ஒரு சிற்றாறு ஓடிக் கொண்டும் இருந்தது. ஓடத்தில் சிறிய குளம் ஒன்றும் இருந்தது. அழகழகாகக் கட்டப்பட்டபடிக்கட்டுகள் வேறு அதில் அமைக்கப்பட்டிருந்தன. அதன் கரையில் பல அழகிய மரங்களும் கட்டடங்களும் கட்டப்பட்டிருந்தன.
அனுமார் ஒரு மிகப்பெய மரத்தைக் கண்டார். அதன் கிளைகள் மிகவும் உறுதியாக இருந்தன. இலைகள் அகன்று தகடு போல் இருந்தன. அதன் மீது ஏறிப்பார்க்கவே ஓடத்தில் அசோக மரத்தையும் அதைச் சுற்றிலும் அழகிய விதத்தில் பல வண்ணங்களில் விளங்கும் மரங்களும் இருக்கக்கண்டார். அசோக மரம் காற்றில் அசையும் போது மெல்லிய சதங்கை ஓசை வந்த கொண்டிருந்தது.
அப்போது அனுமார் �இவ்வளவு மனோகரமான இடத்தில் சீதை தினம் வந்து போகக் கூடும். இந்த இடத்தில் வந்து இருப்போன் மனம் மிகவும் சந்தோஷத்தையே அடையும். தனது துயரத்தை மறக்கவாவது சீதாதேவி இங்கு வராது போக மாட்டாள். எனவே இங்கேயே காத்திருந்து நான் பார்க்கிறேன். சீதாதேவியை இங்குதான் பார்க்க முடியுமென்ற நம்பிக்கை ஏற்படுகிறது. தேவி உயிரோடு இருந்தால் கண்டிப்பாக இங்கே பார்க்க முடியும். எனவே நான் அவர்களுக்காக இங்கு காத்திருக்கிறேன்� என எண்ணினார்.

No comments:

Post a Comment